கள்ளக்காதலிக்கு வெட்டு, 2 குழந்தையை கொலை செய்துவிட்டு வடமாநில தொழிலாளி ஓட்டம்: 4 தனிப்படை பீகார் விரைந்தது

சென்னை: சென்னை அருகேயுள்ள சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவருடன், அசாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவரும் வேலை ெசய்து வருகிறார். துவர்க்கா பாருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனைவரும், இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த துவர்க்கா பார் தனது மனைவி, குழந்தைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது, அருகில் உள்ள குட்டுலு என்பவரது வீட்டிற்கு சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மனைவி, குழந்தைகளை தேடி அங்கு சென்றார். அப்போது, குட்டுலு வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது இரண்டு குழந்தைகள் வாயில் கட்டப்பட்டும், மனைவி காயங்களுடனும் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் மயங்கிய நிலையில் கிடந்த சுமிதா பார்  (21) என்ற இளம்பெண்ணை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தலையில் காயம், கழுத்தில் வெட்டுக்காயம் என உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்டு கிடந்த குழந்தைகள் சிவா (4), ரீமா (1) ஆகிய இரண்டு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததால் துவர்க்கா பார் மற்றும் குட்டுலு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமாகாத குட்டுலு துவர்க்கா பாரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இன்று குழந்தைகளுடன் குட்டுலு வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் குட்டுலு இரண்டு குழந்தைகளையும் தலையில் தாக்கியும் வாயில் டேப்பில் கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து தமது கள்ளக்காதலியையும் அரிவாளால் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு வீட்டை பூட்டு கொண்டு அங்கிருந்து கள்ளக்காதலன் குட்டுலு தப்பி சென்றுள்து விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 4தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய பீகாரை சேர்ந்த குட்டுலு என்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: