தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு உறுதுணை: மாநிலங்களவையில் அன்புமணி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

டெல்லி: தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் ரூ.3,861 கோடி முதலீடுகளை பெற்றுள்ளதாக  ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட வளர்ச்சிகாக மாநில அரசுக்கு ஒன்றிய அரசு உறுதுணையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 நிறுவனங்களுடன் ரூ.11,794 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.3,861 கோடி ரூபாய் முதலீடுகளாக மாறியுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய 5  முனையங்கள் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: