ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை

சென்னை: இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால், ஓபிஎஸ் தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார். சென்னையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். அவரவர் பாணியில் அவரவர்கள் இரட்டை இலைக்காக பிரசாரம் செய்வோம். இரட்டை இலை சின்னம், இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இரட்டை இலைக்கு பரப்புரை செய்வோம். ஓ.பன்னீர்செல்வத்தை  பாராட்டிய செங்கோட்டையன் மாப்பிள்ளைக்கு மிக்க நன்றி. எடப்பாடி பழனிசாமியை ஓ.பி.எஸ் சந்திப்பாரா? என்று கேட்டதற்கு எதுவும் நடக்கலாம்”என்றார்.

Related Stories: