சிறுமி பலாத்காரம்: ஆசாமிக்கு 40 ஆண்டு கடுங்காவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (46). கூலித் தொழிலாளி. கடந்த 2019ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் தனியாக இருந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் திருச்சூர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சூர் குன்னம்குளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்தோஷுக்கு 40 வருடம் கடுங்காவல் சிறையும், ₹1.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Related Stories: