காண்டாமிருகம் தாக்கி 4 பேர் படுகாயம்

கவுகாத்தி: அசாமில் காண்டாமிருகம் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். காண்டாமிருகம் தாக்கி பொதுமக்கள் காயமடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தின் கோலகட் மாவட்டத்தில் கஜிரங்கா தேசிய பூங்கா செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பூங்காவில் உள்ள காண்டாமிருகம் ஒன்று வெளியேறியது. மோஹிமா காவோன் என்ற இடத்திற்கு வந்த காண்டாமிருகம் அங்கிருந்த கூட்டத்தினரை தாக்கியது.

இதனால் அச்சமடைந்த அவர்கள் அலறியபடி ஓடினர். காண்டாமிருகம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வனத்துறை அலுவலர்களும் அடங்குவர். தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள காண்டாமிருகத்தைத் தேடி வருகின்றனர். காண்டாமிருகம் தாக்கியதில் பொதுமக்கள் காயமடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: