மதுரையில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ180 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

மதுரை: மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் இன்று காலை நடந்தது. இதில் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றனர். விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்கள், தேனி வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த இளைஞரணியினர் நேர்காணலில் பங்கேற்றனர்.

மாலையில் பிரமாண்ட விழா

மதுரை பாண்டிகோவில் அருகிலுள்ள ரிங்ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் திடலில் இன்று மாலை 4.30 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த  75 ஆயிரம் பேருக்கு ரூ.180 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்குகிறார். இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: