சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்

குடியாத்தம்: குடியாத்தம் அருகே மலை மீது பெண்ணை கொன்ற வழக்கில் கைதான வாலிபர், ‘திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்று நகைகளை கொள்ளையடித்தேன்’ என்று தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னநாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமராஜ் (26). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது ஹேமராஜ்க்கும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் தீபா(31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 2022ம் ஆண்டு காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கொலை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் குண்டர் சட்டத்தில் ஹேமராஜ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த ஹேமராஜ், தீபாவுக்கு போன் செய்து, ரயில்வேதுறை வேலைக்கு தேர்வு எழுதும்படியும், அதற்கான மெட்டீரியல் தன்னிடம் உள்ளதாகவும் குடியாத்தம் வந்து வாங்கி செல்லும்படியும் கூறியுள்ளார். இதை நம்பிய தீபா கடந்த 14ம்தேதி ரயிலில் குடியாத்தம் வந்தார்.

பின்னர் தீபாவும், ஹேமராஜூம் ரயில்நிலையம் அருகே அடர்ந்த காட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திருமணம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ேஹமராஜ், தீபாவை கழுத்தறுத்து ெகான்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதற்கிடையில் தீபாவை காணவில்லை என சென்னை புளியந்தோப்பு போலீசில் அவரது பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபாவின் செல்போன் அழைப்புகளை கொண்டு ஹேமராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தீபாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நேற்றிரவு குடியாத்தம் பகுதியில் அடர்ந்த காட்டில் அழைத்து சென்று அழுகிய நிலையில் இருந்த தீபாவின் சடலத்தை மீட்டனர். அங்கிருந்த கத்தி, தீபாவின் பை ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து ஹேமராஜிடம் குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ேஹமராஜ் சென்னையில் பணியாற்றியபோது, அங்குள்ள கடையில் செல்போனுக்கு சிம் கார்டு வாங்கியுள்ளார்.

அப்போது அந்த கடையில் இருந்த தீபாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதற்கிடையில் கொலை வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய ஹேமராஜ், தீபாவுடன் மீண்டும் பழக ஆசைப்பட்டு ரயில்வே வேலை ஆசை காட்டி வரவழைத்துள்ளார். குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள அடர்ந்த காட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது தீபா, தான் ஏற்கனவே விவாகரத்து பெற்று தனியாக வசிப்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹேமராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் இதனை எதிர்பாராத ேஹமராஜ் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ேஹமராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த 4 சவரன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். ஹேமராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: