மணலி புதுநகரில் அய்யா கோயில் ராஜகோபுர ஆண்டுவிழா

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் நேற்று அய்யா வைகுண்டசாமி திருக்கோயிலில் 21ம் ஆண்டு ராஜகோபுர விழா நடைபெற்றது. சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டபுரத்தில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி திருக்கோயில் மிகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் நேற்று 21ம் ஆண்டு ராஜகோபுர ஆண்டு விழா நடைபெற்றது. காலை பால்பணிவிடை உகப்படிப்பும், மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிபடிப்பும் நடைபெற்றது. பின்னர் 2 மணிக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ராஜகோபுர ஆண்டு விழாவை முன்னிட்டு 500 பெண்கள் பச்சரிசி, பச்சை பயிறு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கொண்டு பொங்கல் வைத்து அய்யாவை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியை தொழிலதிபர் எச்.ராஜா துவக்கி வைத்தார்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு பால் பணிவிடை உகப்படிப்பும், 6 மணிக்கு அய்யா வைகுண்ட பரம்பொருள் இந்திர விமானத்தில் பதிவலம் வந்தார். இரவு 8 மணிக்கு பாலன்னம், இனிதர்மம் வழங்கப்பட்டு நிறைவுற்றது. இதில் தலைவர் துரைபழம் நிர்வாகிகள் ஜவென்ஸ், ஜெயக் கொடி, சுந்தரேசன், கண்ணன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: