நாட்டின் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை: பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: `` இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை. அவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது,’’ என்று பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் `ஜெய்ப்பூர் மகா விளையாட்டு விழா’வுக்கு அத்தொகுதியின் மக்களவை எம்பி.யும் முன்னாள் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஏற்பாடு செய்திருந்தார். இந்தாண்டு கருப்பொருளாக கபடியை மையமாகக் கொண்டு கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு விழாவில்,  6,400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் இளைய தலைமுறையினரால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை. அவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஒன்றிய அரசு ஊக்கப்படுத்துகிறது. ஒலிம்பிக்கை நோக்கி இலக்கு திட்டத்தின் மூலம் இளைஞர்கள் முக்கிய விளையாட்டுகளில் பங்கேற்க தயாராகும் வாய்ப்பை பெறுகின்றனர். இந்த விழாவின் விளையாட்டு திறமையை வளர்க்கவும், அதன் மீதான ஆர்வத்தை தூண்டவும் செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: