ஈவிகேஎஸ்சுக்கு குலாலர் சங்கம் நேரில் ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, திமுக-காங்கிரஸ் தலைமை தேர்தல் பணிமனையில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் மாநில தலைவர் சேம.நாராயணன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான ஆட்சிக்கு, அவரது கரங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து, எங்களது குலாலர் சங்கத்தின் சார்பில் தேர்தல் பணியாற்ற உள்ளோம் என்றார்.

Related Stories: