வேட்பாளர் வாபஸ்? ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அப்செட்

பாஜ தலையீட்டின் காரணமாக எடப்பாடி தலைமையிலான  அணியின் வேட்பாளரை ஆதரிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து விட்டதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்  செய்துள்ள ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற வைக்க முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து, முதல்கட்டமாக செந்தில்  முருகனை சரி கட்டுவதற்காக அமைப்பு செயலாளர் பதவியை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், மாவட்ட நிர்வாகிகள் யாரையும் கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் வாபஸ் பெறும்  முடிவை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ள நிர்வாகிகள், அடுத்த  கட்டமாக என்ன செய்வது எனத்தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், செந்தில்முருகனுக்கு  தேர்தல் பணியாற்றுவதற்காக தென்மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகள்  நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு  சென்றுவிட்டனர். நிர்வாகிகளும் அப்செட்டானதால் தேர்தல் பணிமனைக்கு வரவில்லை. பணிமனை வெறிச்சோடி கிடந்தது.

Related Stories: