நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக  ஈரோடு சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக ஈரோடு மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது என்று கூறினர்.

இருப்பினும், அதையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் கைகளில் கரும்புகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதனால், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: