ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சிவபிரசாந்த், அமமுக மாற்று வேட்பாளர் விசாலாட்சி, அதிமுக ஓபிஎஸ் அணி செந்தில்முருகன், இந்திய சுயராஜ்ய கட்சி ராம்குமார், சுயேட்சைகள் தங்கவேல், ராகவன், சம்சுதீன், மணிவண்ணன், அக்னி ராமசந்திரன், வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி கிருஷ்ணமூர்த்தி, அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி திருக்கை முனியப்பன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி அருள், சுயேட்சை கீர்த்தனா, சமாஜ்வாதி கட்சி முத்துசாமி, இந்திய கண சங்கம் கட்சி மாதன் உள்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

அதில் சுயேட்சை வேட்பாளர் அக்னி ராமசந்திரன் என்பவர் தேர்தல் டெபாசிட் தொகையை ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு உள்பட டிஜிட்டல் கரன்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்திற்கு 5 மற்றும் 2 ரூபாய் சில்லரை நாணயங்களை கொண்டு வந்து செலுத்தினார். மாற்றுத்திறனாளி மணிவண்ணன் என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போட்டியிடுவதாக கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட கடந்த 4 நாட்களில் 36 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: