போதைக்கு அடிமையாக்கி பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபர் மீது போலீசில் புகார்

தாம்பரம்: குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, தினசரி பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த விக்கி (22) என்ற நபர், அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று வந்துள்ளார். பின்னர், மாணவியுடன் பழகி, அவரை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்று மதுபானம் கொடுத்து, பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டதால் மாணவி அவரிடம் பேச மறுத்துள்ளார். இதனையடுத்து, தன்னுடன் பேசவில்லை என்றால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன், என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து பள்ளியில் சோர்வான நிலையில் காணப்பட்ட மாணவி குறித்து பள்ளியிலிருந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரணையில், பாலியல் பலாத்காரம் விவகாரம் தெரிய வந்துள்ளது. இதனால், மாணவியின் பெற்றோர் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: