இந்தூர்: மது குடிப்பதை தவிர்க்க மதுக்கடைகள் முன்பு பசுக்களை கட்டி உமாபாரதி நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபாரதி. பா.ஜவை சேர்ந்த இவர் மது விற்பனைக்கு எதிராக போராடி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதுக் கடையில் உமாபாரதி மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல் போபாலில் உள்ள ஒரு மதுக் கடை மீது கல் எறிந்தார். இந்தநிலையில் தற்போது ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார். மேலும் பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்று மதுவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
