அபுதாபி-கோழிக்கோடு விமான இன்ஜினில் திடீர் தீ: 184 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

புதுடெல்லி: அபுதாபியில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் மீண்டும் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 184 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நகருக்கு நேற்று காலை ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் விமானம் நேற்று காலை புறப்பட்டது.  போயிங் 737-800 ரகமான விமானத்தில் மொத்தம் 184  பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட  சில நிமிடங்களிலேயே விமானத்தின் ஒரு இன்ஜினில் தீப்பிடித்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த விமானம் மீண்டும் அபுதாபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதில் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில, அபுதாபியில் இருந்து நேற்று காலை கோழிக்கோடு நகருக்கு புறப்பட்ட விமானம் 1000 அடிக்கு மேல்நோக்கி பறந்தபோது விமான இன்ஜினில்  தீப்பிடித்தது. அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

* விமான ஊழியர்-பயணிகள் மோதல்

டெல்லியில்  இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று பாட்னாவுக்கு செல்ல இருந்தது. காலை 7.20  மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 9 மணி நேரம் ஆகியும் புறப்படவில்லை. இதனால், பயணிகள் விமான  ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமானது’’ என்றார்.பின்னர் 10.10 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

Related Stories: