குறுக்குப்பாதை அடைப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் மேலப்பாளையத்தில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்

நெல்லை: மேலப்பாளையம் பகுதியில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், முன்னீர்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் வருவோர் குறுக்கு வழியின்றி திண்டாடுகின்றனர். மேலப்பாளையம் கிராசிங் ரயில் நிலையமாக மாறி வரும் நிலையில், அங்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரட்டை ரயில்பாதை பணிகளும் அப்பகுதியில் வேகமாக நடந்துவருகின்றன.

இந்நிலையில் முன்னீர்பள்ளம், தருவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மேலப்பாளையம் வருவோர் தண்டவாள மண்சாலையை தற்போது பயன்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். முன்னீர்பள்ளம், தருவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலப்பாளையம், மேலநத்தம் மற்றும் டவுன் செல்வோர் சந்தை முனைக்கு செல்லாமல் குறுக்கு வழியில் முன்னீர்பள்ளம் ரயில்வே பாதை வழியாக மேலப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இப்பாதையில் தற்போது பணிகள் துரிதமாக நடப்பதால் அப்பாதையில் பைக், ஆட்டோ, லாரிகளில் வருவோர் குறுக்குப்பாதை அடைப்பட்டதால் திண்டாடி வருகின்றனர். சிலர் பழைய ஞாபகத்தில் பாதி தூரம் வந்து பாதை அடைபட்டதால் திரும்பிச் செல்கின்றனர். எனவே அப்பகுதியில் மாற்றுப்பாதை வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். முன்னீர்பள்ளம் புதுக்கிராமம் தொடங்கி கீழமுன்னீர்பள்ளம் மாரி ஓடை வழியாக, கருப்பந்துறை வரும் பாதையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: