நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை: மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை

புதுடெல்லி: அதானி குழுமம் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது தலைமை நீதிபதி நியமனம் செய்யும் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன  கார்கே கூறுகையில், “எல்ஐசி போன்ற நிறுவனங்கள் அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கட்டப்பட்டுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களின் பணம் அதானி நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ளது.  ஹிண்டன்பர்க் அறிக்கையால் அந்த நிறுவனம் பற்றிய தகவல் வெளியே வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன, அந்த நிறுவனம் யாருடையது என்பது உங்களுக்குத் தெரியும். இத்தகைய நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஏன் பணம் கொடுக்கிறது? எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற நிறுவனங்கள் ஏன் பணம் கொடுத்தது என்று விசாரிக்கப்பட வேண்டும்.கூட்டு நாடாளுமன்றக் குழு அல்லது இந்திய தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் ஒரு குழு அமைக்க வேண்டும்’’ என்றார். மக்களவைக் கூட்டத்திற்கு முன்னதாக,மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி,ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் பல கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: