ஒரு சிலரின் நலனுக்காக எல்ஐசி, வங்கிகள் பணத்தை பாஜ பயன்படுத்துகிறது: மம்தா குற்றச்சாட்டு

பர்தமான்: மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தாமான் மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மோடி அரசு நீண்ட காலம் நீடித்தால் அனைத்து வங்கிகளும் மூடப்படும். எல்ஐசி பங்குகள் விற்கப்படும் விதத்தை பார்க்கும் போது அதுவும் நிறுத்தப்படும். மக்களுக்குச் சொந்தமான எல்.ஐ.சி மற்றும் வங்கிகளின் பணம் பா.ஜ மற்றும் பாஜவுக்கு நெருக்கமான சில பிரபலங்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் விதம்  உங்களுக்குத் தெரியாது. உங்கள் பணத்தை வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து திரும்ப பெற்றுவிடுங்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தை ஒரு பெரிய சரிவைக் கண்டது. பங்குகளால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்குமாறு சிலருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. புதிய வருமானவரி விகிதம் பயன் அளிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: