அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை: பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பட்ஜெட்டாகவே உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தை புறக்கணிக்கும் பட்ஜெட் ஆகவும் தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட் ஆகவும் உள்ளது. தமிழக மக்கள் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். அதிமுக கூட்டணி ஒரு கூட்டணியே இல்லை அதிமுக கட்சிக்கு இனிமேல் எதிர்காலமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: