கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்

மதுரை: மதுரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல துணைச்செயலாளர். இவர், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய ஏட்டு ஹரிஹரபாபுவின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலிப்படைக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து ஏவி அவரை கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையினர் என 8 பேரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஏட்டு ஹரிஹரபாபுவை, போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் அதிரடியாக நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: