பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரின் 5 வது பந்தில் பின் ஆலென் அடிக்க, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற சூர்யகுமார் யாதவ்விற்கு மேல் பறந்து சென்றது. ஆனால், பந்து வருவதை அறிந்த சூர்யகுமார் யாதவ் அதை பறந்து பிடித்தார். அதே போன்று ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரின் 4வது பந்தில் கிளென் பிலிப்ஸ் ஸ்லிப்பில் நின்ற சூர்யகுமார் யாதவ் பக்கமாக பந்தை அடிக்க, அது அவர் இருக்கும் உயரத்திற்கு மேல் சென்றது. இருந்தாலும், அசால்ட்டாக பறந்து பந்தை பிடித்து அசத்தினார்.

அதோடு, ஷிவம் மாவி வீசிய 8.3 வது ஓவரில், சான்ட்னர் சிக்சர் அடிக்க, அந்த பந்தை பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் அபாரமாக பிடித்தார். இப்படி ஒரே போட்டியில் பீல்டிங்கில் மாஸ் காட்டிய அவருக்கு ரசிகர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யகுமார் பிடித்த இந்த கேட்ச் வீடியோ, சமூகவலை தளங்களில் வைரலானது.

Related Stories: