பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், போக்சோவில் கைது

திருப்போரூர்: திருக்கழுக்குன்றத்தில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருக்கழுக்குன்றம் அருகே வெங்கம்பாக்கத்தை அடுத்த பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. இதன்காரணமாக மாணவி அடிக்கடி தனது வீட்டில் தனியாக இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பக்கத்து வீட்டை சேர்ந்த வினோத் என்கிற மகேஷ்குமார் (21) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் ஜாலியாக பேசியதுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதன்காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இதுபற்றி தெரிவந்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக தெரிகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி, சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஒரு வீடியோவில், ‘’தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது’’ என்று கதறி அழுதுள்ளார். இதுசம்பந்தமாக சதுரங்கப்பட்டினம் போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுப்பது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கு மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.  இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லில்லி விசாரணை நடத்தி வினோத் என்கிற மகேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’மாணவியை கர்ப்பமாக்கியது உண்மை’ என்று தெரியவந்து உள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர்.

Related Stories: