திருவள்ளூர் ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை சஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடக்கிறது. திருவள்ளூரில் பிரசித்தி  பெற்ற அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜீர்னோத்தாரணம் செய்து, வண்ணம் தீட்டி திருப்பணி நிறைவு பெற்று புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிவகாம முறைப்படி இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  முன்னதாக, கடந்த ஜனவரி 27ம்தேதி காலை கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், தீபாராதனை, மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, தீபாராதனை நடைபெற்றது.  

இதைத்தொடர்ந்து 28ம்தேதி காலை 8 மணிக்கு மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், திசா ஹோமம், தீபாராதனை, மாலை அங்குரார்பணம், பிரதான ஆச்சார்ய ரஷாபந்தனம், பூர்ணாஹூதி, தீபாராதனை, 29ம்தேதி காலை அக்னி ஸங்கிரஹணம், தீர்த்த ஹங்கிரஹணம், பிரசன்னாபிஷேகம், தீபாராதனை, யாக  அலங்காரம், மாலை கும்பலங்காரம், முதல் கால யாகம்,  தீபாராதனை நடந்தது. 30ம்தேதி காலை விசேஷ சந்தி, பாவனாபிஷேகம், 2ம் கால யாகம்,  அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், தீபாராதனை, மாலை முதல் விஷேச சந்தி, பாவனாபிஷேகம், 3ம் கால யாகம்,  பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று 31ம்தேதி காலை விசேஷ சந்தி, 4ம் கால யாகம், தத்வார்ச்சனை, திரவியாஹூதி, தீபாராதனையும்,  மாலை 5ம் கால யாகம், ஸ்பரிஸாஹூதி, தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு 6ம் கால யாகபூஜை,  8.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, சண்டேச யாகம், 9 மணிக்கு யாத்ரா தானம்,  கடம் புறப்படுதல், 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு மஹாபிஷேகமும், 6 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணமும், ரிஷப வாகன சேவையும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.  மகா கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணை தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர், திருவள்ளூர் துளசி ரோஜா, திரையரங்குகள் உரிமையாளர்கள் என்.பாலசுப்பிரமணியம் செட்டியார், என்.பி.செல்வராஜ், பி.உதயகுமார் என்ற பாலாஜி, ஏ.பி.எஸ் பள்ளிக்குழும தலைவர் ஏ.பி.எஸ்.ரமேஷ் என்ற சுப்பிரமணியன், பொருளாளர் பிரேமா சுப்பிரமணியன், அறங்காவலர் ஏ.பி.எஸ்.பாபு, நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, அர்ஜுனா அ.குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ரா.ரவி குருக்கள் செய்திருந்தார்.

Related Stories: