66 ஆண்டாக ஓய்வூதியம் பெற்ற 100 வயது முன்னாள் ராணுவ வீரர் மரணம்: ராஜஸ்தானில் சோகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 66 ஆண்டாக ஓய்வூதியம் பெற்ற 100 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் உடல்நலக் குறைவால் காலமானார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற போட்கி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  பாய்ட்ராம் துடி (100). இவருக்கு சந்தா தேவி சாய்னா (92) என்ற மனைவியும், தரம்வீர் மற்றும்  முகந்தரம் என்ற இரண்டு மகன்களும், தரம்வீர், சத்யபிரகாஷ், முகேஷ், சுர்ஜித்  ஆகிய நான்கு பேரன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று உடல்நலக் குறைவால் பாய்ட்ராம் துடி காலமானார். இவரது மறைவால் கிராம மக்கள் சோகமடைந்தனர்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, லிபியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பணியாற்றினார். கடந்த 1957ம் ஆண்டு ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு 19 ரூபாய் மாத ஓய்வூதியம் கிடைத்தது; தற்போது வரை சுமார் 66 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று வந்தார். கடைசியாக அவருக்கு மாத ஓய்தியம் ரூ.35,640 வரை கிடைத்தது. தற்போது பாய்ட்ராம் துடி காலமானதால், அவரது மனைவிக்கு சட்ட விதிகளின் படி குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: