குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்: ஐகோர்ட்

சென்னை: குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

1999-ல் திருமணம் முடித்த கிரண்குமார், உஷா ஆகியோர் அமெரிக்காவில் குடியேறிய பின் விவாகரத்து பெற்றனர். 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்கவும், மனைவி தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் கணவர் கிரண்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு குழந்தைகளையும் வரவழைத்து விசாரித்த நீதிபதி, குழந்தைகளை தாயின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து உத்தரவிட்டார். கணவர் கிரண் குமார் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

Related Stories: