திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள்-எம்பி தகவல்

திருப்பதி : திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று எம்பி ேமாகித் தெரிவித்துள்ளார். திருப்பதி பைரெட்டிபள்ளி பகுதியில் நேற்று நடைபெற்ற வீட்டுக்கு வீடு உங்கள் அரசு நிகழ்ச்சியில்  எம்பி மோகித் கலந்து கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் மாநில அரசு அளித்து உள்ள நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், ‘முதல்வர் ஜெகன்மோகன் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் நலம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் முதியோர்களுக்கு பென்ஷன், மகளிருக்கு உதவித்தொகைகள், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கரின் ஒத்துழைப்போடு ₹3.25 கோடியில் புதிய சிமெண்ட் சாலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது. மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: