இரவில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு

பெரம்பூர்: கொடுங்கையூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் டைலர் பாத்திமா (50). இவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் கதவை உள்பக்கமாக பூட்டாமல் மூடிவிட்டு உறங்க சென்றார். இரவு 1 மணியளவில் வீட்டிற்குள் யாரோ ஒரு நபர் வெளியே செல்வதுபோல தெரிந்ததால், எழுந்து பார்த்தபோது அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டார்.

இதனால், அதிர்சியடைந்த பாத்திமா வீட்டில் உள்ள பொருட்களை சரி பார்த்ததோடு அவரது மகள் மற்றும் மகன் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் காணாமல் போனது தெரிந்தது, பாத்திமா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: