மறைந்த திருமகன் ஈவெரா குறித்து பேச சீமான் அறிவாளி இல்லை: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: மறைந்த திருமகன் ஈவெரா குறித்து, உண்மைக்கு புறம்பான தகவல்களை சீமான் சொல்கிறார் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.சீமான் ஒரு காலத்தில் பெரியாரிய கொள்கையில் இருந்த போது திருமகன் ஈவெராவை சந்தித்து இருக்கலாம்.ஆனால், அவரது கட்சியில் இணைவது பற்றி கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார். மேலும், அவருடைய தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் செய்யவில்லை என்று போகிற போக்கில் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார் சீமான். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் திருமகன் ஈவெராவை பற்றி கேட்டால் அவரின் உயர்வான தன்மை குறித்து சீமானால் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால், சீமான் அவ்வாறெல்லாம் செய்யக்கூடிய அறிவாளி அல்ல. எப்போதும் சீமான் இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதனால் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவதே இவரது வாடிக்கையாகிவிட்டது. இதுதான் இவரின் லட்சணம். மறைந்தவர்களை குறித்து உண்மைக்கு புறம்பாக அவர்கள் சொல்லாத செய்திகளை பேசாமல் இருக்க வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகவும், இது போன்ற கருத்துக்களை கூறி வரும் சீமானுக்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Related Stories: