சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ: தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு

சித்தூர்: ஆந்திர மாநில சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் மோர்தான பள்ளி பகுதி உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான பேட்டரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தனியாருக்கு சொந்தமான பேட்டரி தொழிற்சாலையில் வழக்கம் போல பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. நேற்று மாலை பணியாளர்கள் பணியில் ஈடுப்பட்டு இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு எளிதில் தீ பற்றும் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்தனர். தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ பரவ தொடங்கிய உடனே தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 

Related Stories: