திமுக சட்டத்துறையின் லோகோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்

சென்னை: திமுக சட்டத்துறை லச்சினை (லோகோ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் திமுக சட்டத்துறைக்கான புதிய இலச்சினை (லோகோ) நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும், திமுக சட்டத்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய செயலிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்ட திமுக சட்டத்துறையின் வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய செயலிகள் வழியாக கட்சியின் பணிகள் அனைவருக்கும் சென்றடையும் வகையில், உடனுக்குடன் திமுக சட்டத்துறை வெளியிடும். இந்த நிகழ்ச்சியின்போது திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ எம்.பி, சட்டத்துறை இணை செயலாளர்கள் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் துணை செயலாளர்கள் கே.சந்துரு, ஜெ.பச்சையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: