இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேமரூன் கிரீன் விலகல்

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸி. ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் கைவிரலில் ஏற்பட்ட முறிவு காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்திய சுழலை சமாளிக்க சிட்னியில் சிறப்பு ஆடுகளம் தயார் செய்து ஆஸி. வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: