ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு- எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பு?

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி அதிமுக மக்களவை குழு தலைவர் என்று குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு முன்பு அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு இபிஎஸ் கோரிக்கை கடிதம் எழுதிய நிலையில், இந்த அழைப்பு இபிஎஸ்-ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை உறுதி செய்கிறது.

Related Stories: