நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மகளிர் பாசறை இணைச்செயலாளரான மேனகா நவநீதன் போட்டியிடுவதாக சீமான் நேற்று ஈரோட்டில் அறிவித்தார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேனகா நவநீதன் (36) ஈரோடு சூரம்பட்டி வலசு என்ஜிஜிஓ காலனி பூசாரி சென்னிமலை வீதியை சேர்ந்தவர். இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு) பட்டம் பெற்றுள்ள இவர், மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

Related Stories: