தேன் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வழக்கு: காதி வாரியம் பரிசீலிக்க உத்தரவு

மதுரை: மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் டோரா கிறிஸ்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017 வரை ஒரு கிலோ தேன் ரூ.130க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதை ரூ.140 ஆக உயர்த்தி தர கோரியதன்பேரில் 2018ல் ரூ.140 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால், கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டுமென்பது உற்பத்தியாளர்களின் கோரிக்கை. இதை வலியுறுத்தி சங்க வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேன் கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், தேன் கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்தி தர வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கையை காதி மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அலுவலர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து 8 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கூறியுள்ளார்.

Related Stories: