நிலக்கரி வரியில் ஊழல் சட்டீஸ்கரில் 4 பேர் கைது

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நிலக்கரி வரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில்  4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சட்டீஸ்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலக்கரி வரியில் ரூ.540கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் கடந்த 13ம் தேதி டெல்லி மற்றும் புனேவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதனை தெடர்ந்து கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் சட்டீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் சவுமியா சவுராசியா கைது செய்யப்பட்டார். நேற்று சவுமியாவின் நம்பிக்கைக்குரிய நபராக கருதப்படும் தீபேஷ் டாங், சுரங்க அதிகாரிகள்  சந்தீப் குமார் நாயக், ஷிவ் சங்கர் நாக் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரி போல் நடித்து ஏமாற்றிய ராஜேஷ் சவுத்ரி ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் 30ம் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: