தொழில் போட்டியில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை ஒய்எம்சிஏ குப்பத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (34). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளுக்கு தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகிறார். இதேபோல், புது வண்ணாரப்பேட்டை பல்லவன் நகர் 3வது தெருவை சேர்ந்த பிரசாத் (27) என்பவரும் படகுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இவர்மீது காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் பல்வேறு வழங்குங்கள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காசிமேடு பகுதியில் செல்வகுமார், அவரது நண்பர்களுடன் சேர்ந்து, பிரசாத்தை வழிமறித்து, தண்ணீர் கேன் போடுவது தொர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்களிடையே சண்டை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரசாத் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, செல்வகுமார் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வகுமார் வலி தாங்க முடியாமல் கத்தியதும், அங்கிருந்து பிரசாத் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாரை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பிரசாத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: