நேபாள துணை பிரதமர் திடீர் ராஜினாமா

காத்மாண்டு:  நேபாளத்தின் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருப்பவர் ரபி லாமிச்சானே. கடந்த டிசம்பர் 25ம் தேதி அவர் துணைப்பிரதமராக பதவிஏற்றார். இந்த நிலையில் அவர் எம்பி தேர்தலில் போட்டியிட்ட போது சமர்ப்பித்த குடியுரிமை சான்றிதழை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரபி லாமிச்சானே தனது அமெரிக்க குடியுரிமையை துறந்த பிறகு தனது நேபாள  குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான செயல்முறையை முடிக்காததால், அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து  48 வயதான லாமிச்சானே தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் புஷ்ப கமல் தஹல்  பிரசந்தாவிடம் ஒப்படைத்தார்.

Related Stories: