என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக வீடுகளில் கருப்புகொடி ஏற்றி குடியரசு தின விழாவை புறக்கணித்த 7 கிராம மக்கள்

சேத்தியாத்தோப்பு: என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக 7 கிராமங்களில் விவசாயிகள் நேற்று தங்களது வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்த முனைப்பு காட்டுகிறது. தற்போது மத்திய, மாநில அரசின் ஒப்புதலோடு சமீபத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டது என்.எல்.சி. நிர்வாகம். 2000ம் ஆண்டு முதல் நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு அப்போது 6 லட்ச ரூபாய் அறிவித்தது என்.எல்.சி. நிர்வாகம்.

ஆனால் தற்போது ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் தர இருப்பதால் அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் எங்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் தர வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், 2000 ஆண்டு முதல் சமமான இழப்பீடு ஒரு கோடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து நேற்று வளையமாதேவி, சாத்தப்பாடி, கம்மாபுரம், ஊ. ஆதனூர், கத்தாழை, அம்மன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி குடியரசு தின விழாவை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: