ஆலப்புழா அருகே மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: வாலிபர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை தூக்கி சென்று கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே நூரநாடு பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (27). தாய், தம்பியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் போதை பொருளுக்கு அடிமையான பிரணவின் தொல்லை தாங்க முடியாமல் தாயும், தம்பியும் வேறொரு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி இளம்பெண் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பிரணவ், இளம்பெண்ணின் வாயை மூடி குண்டுக்கட்டாக தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றார். பின்னர் அவரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்று விட்டார். இதற்கிடையில் இளம்பெண்ணை நீண்டநேரமாக காணாததால் வீட்டினர் தேடினர். அப்போது பிரணவின் வீட்டுக்கு அருகே இளம்பெண்ணின் செல்போன், பொருட்கள் கிடந்தன. உடனே பிரணவ்வின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது மாற்றுத்திறனாளி இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நூரநாடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான பிரணவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: