கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் பெற வேண்டி உள்ளதாக சிபிசிஐடி கூடுதல் அவகாசம் கேட்டதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். கோடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்தது.

Related Stories: