தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா தற்கொலை

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா தற்கொலை செய்துகொண்டார். ‘குண்டனப்பு பொம்மை’ என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார் சுதீர் வர்மா. இந்த அப்படத்தை தொடர்ந்து செகண்ட் ஹேண்ட் மற்றும் ஷூட் அவுட் அட் அலேரு ஆகிய படங்களிலும் சுதிர் வர்மா நடித்துள்ளார். சில படங்களில் நடித்தாலும் பிசியான நடிகராக முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது, விஷம் குடித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் கூறும்போது, ‘சுதீர் வர்மாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. அவரது குடும்பத்தாருக்கும் இதுபற்றி எதுவும் தெரியவில்லை. பொருளாதார பிரச்னை, காதல் தோல்வி, மன அழுத்தம் உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடக்கிறது’ என்றார்.

Related Stories: