ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ,கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் பாதுகாத்து கொள்ள வேண்டும்-அதிகாரியிடம் தெலுங்குதேசம் மனு

ஸ்ரீகாளஹஸ்தி :  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனி ஆட்கள் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் திங்கட்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை நிர்வாக அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டியை சந்தித்து மனுவை வழங்கினர். இதுகுறித்து என்.ஆர். கிருஷ்ணா ரெட்டி மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:

ஸ்ரீகாளஹஸ்தி நகரில் சர்வே எண் 292-ல் 4.03 ஏக்கர் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றம் செய்து அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக தற்போது ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் .காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர்.  இந்த நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  நன்கொடையாளர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கினர்.

இந்த நிலம் தற்போது சுமார் ரூபாய் 80 கோடி மதிப்புள்ளதாகும். அந்த நிலத்தை ஒர்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக ஆவணங்களில் மாற்றம் செய்ய கோயில் அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இதனால் கோயில் அதிகாரிகள் இந்த நிலத்தை ஆக்கிரம்பு செய்யாத வகையில் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.  இதில் தெலுங்கு தேசம் கட்சி நகர தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் ரமேஷ், உஷா, கண்டா ரமேஷ், கிஷோர், வெங்கடேஸ்வரசௌத்ரி, பிரசாந்த், பிரசாத் ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: