இந்திய ஒற்றுமை பயணத்தை தொடர்ந்து காங்கிரசின் அடுத்த வியூகம்: 56 தனித் தொகுதிகளை குறிவைத்து புதிய செயல்திட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் 56 தனித் தொகுதிகளை குறிவைத்து செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது. குமரி முதல் காஷ்மீர் வரை பெரும் வரவேற்பை பெற்ற இப்பயணத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 56 எஸ்.சி., எஸ்.டி. தொகுதிகளை குறிவைத்து காங்கிரஸ் செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தனி தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தி காங்கிரஸ் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் இடம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 மாதங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் பட்டியல் பழங்குடி சமூக உள்ளூர் தலைவர்கள், இளம் அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரை அணுகி காங்கிரசில் சேர்ப்பது அக்கட்சியின் யூகம். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஏப்ரல் முதல் வாரத்தில் இப்பணிகள் குறித்து மதிப்பீடு செய்யவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

Related Stories: