யோகா வகுப்பு எடுப்பதாக கூறி குர்தாவை தூக்கி வயிற்றை காட்டிய ம.பி முதல்வர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செஹோர்: யோகா வகுப்பு எடுப்பதாக கூறி தனது குர்தாவை தூக்கி வயிற்றைக் காட்டி செய்து செய்து காட்டிய மத்திய பிரதேச முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், செஹோர் மாவட்டம் நஸ்லுல்லாகஞ்சில் நடந்த யோகா பயிற்சி மையத்திற்கு சென்றார். அப்போது நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, திடீரென மேடையில் அமர்ந்தவாறு ேயாகா குறித்த விளக்கங்களை அளித்தார்.

பின்னர், மூச்சுப் பயிற்சி மற்றும்  பிராணாயாமத்தின் முக்கியத்துவம் குறித்து செயல்விளக்கம் நிகழ்த்திக் காட்டினார். அவர் அணிந்திருந்த குர்தாவை தூக்கிப் பிடித்து, வயிற்றிப் பகுதியை காட்டி மூச்சுப் பயிற்சியை எவ்வாறு செய்வது என்றும், அந்த நேரத்தில் வயிற்றுப் பகுதியில் நிகழும் மாற்றங்கள் குறித்தும் விளக்கினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்தவர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் ஆரவாரம் செய்து சிரித்தனர்.

பெண்களும் தங்களது வாயில் கையை வைத்தப்படி சிரித்தனர். அப்போது அவர் மேலும் பேசுகையில், ‘இந்த மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது சொந்த பணம் ரூ.4.25 கோடியை மாணவர்களுக்காக அளித்துள்ளனர். அவை மாவட்டத்தில் உள்ள 1,552 பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்’ என்றார். யோகா வகுப்பு எடுப்பதாக கூறி தனது குர்தாவை தூக்கி வயிற்றைக் காட்டி  செய்து செய்து காட்டிய முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகிறது.

Related Stories: