வருகிற குடியரசு தினம் முதல் ‘இன்கோவாக்’ நாசில் தடுப்பூசி: பாரத் பயோடெக் தலைவர் தகவல்

போபால்: வரும் 26ம் தேதி முதல் பாரத் பயோடெக்கின் நாசில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று அதன் தலைவர் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவில், பாரத் பயோடெக் நிறுவன  தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா பேசுகையில், ‘கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லும்பி தோல் நோய்க்கான தடுப்பூசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

 மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசில் தடுப்பூசி (இன்கோவாக்) வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இந்த தடுப்பூசி, ஒன்றிய அரசின் மூலம் ஒரு டோஸ் ரூ. 325க்கும், தனியார் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு ேடாஸ் ரூ. 800க்கும் விற்பனை செய்யப்படும்’ என்றார்.

முன்னதாக கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்கள், நாசில் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஹீட்டோரோலஜஸ் பூஸ்டர் தடுப்பூசியாக நாசில் தடுப்பூசி போடுவதற்கான அனுமதியை கடந்த நவம்பரில் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: