ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா?.. பின்வாங்குமா?.. பாஜகவுக்கு நெருக்கடி..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக போட்டியிடுவது உறுதியாகி உள்ள நிலையில் பாஜக போட்டியிடுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே 14 பேர் கொண்ட பணிக்குழுவை பாஜக தலைவர் அண்ணாமலை அமைத்தார். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்காகவே தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவின் ஆதரவை கோர திட்டமிட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளை இன்று எடப்பாடி தரப்பு நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவும் முடிவு செய்துள்ளது. பாஜக போட்டியிடாவிட்டால் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை விடுக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளர். அதிமுகவின் இரு அணியும் ஆதரவு கேட்பதால், ஒரு தரப்பை ஆதரிக்குமா அல்லது பாஜக தனித்து களம் இறங்குமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

கட்சி மேலிடத்தின் வலியுறுத்தல் அடிப்படையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தனித்து போட்டியிடுமா அல்லது பாமகவைப் போல போட்டியிடவில்லை என அறிவிக்குமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: