குடியரசு தின ஒத்திகைக்கு மத்தியில் டெல்லியில் ‘காலிஸ்தானி’ போஸ்டர்: தீவிரவாத தடுப்பு பிரிவு தீவிர விசாரணை

புதுடெல்லி: குடியரசு தின ஒத்திகைக்கு மத்தியில் டெல்லியில் ஆங்காங்கே காலிஸ்தானி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும்  நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகின்றன. வரும் 23ம் தேதி ஒத்திகைகள் நடத்தப்படும்; அதனால் கர்தவ்யாபத்தை  சுற்றியுள்ள பகுதியில், டெல்லி காவல்துறையில் நாசவேலை தடுப்பு பிரிவினர்  சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட ேசாதனைகளில் டெல்லியின் விகாஸ்புரி, ஜனக்புரி, பஸ்சிம் விஹார், பீராகர்ஹி, மேற்கு டெல்லியின் சில பகுதிகளில், காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக ‘நீதி கேட்கும் சீக்கியர்கள், காலிஸ்தானி ஜிந்தாபாத் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக டெல்லி போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவினரும் அப்பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: