பள்ளி மாணவர்கள் வாழ்க்கையுடன் ஆளுநர் விளையாடுகிறார்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் 104 வார்டுகள் பாஜக வெற்றி பெற தானே காரணம் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கூறியதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டமன்றத்தில் பேசிய அவர் ஆளுநர் வி.கே.சக்சேனா மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். ஆரம்பம் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்து நாட்டிற்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்ததை  ஆளுனர் தடுத்து நிறுத்தியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் வாழ்க்கையுடன் ஆளுநர் சக்சேனா விளையாடுவதாக அவர் கூறினார்.  மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆளுநரின் கதி என்னாகும் என்றும் கெஜ்ரிவால் சாடினார். தற்போது காலணி ஆட்சி நடக்கவில்லை என்றும், மக்கள் தேர்தெடுத்த ஆட்சி நடப்பதாகவும் அவர் கூறினார். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த வைஸ்ராய் போன்று, ஆளுநர் நடந்து கொள்வதாக கெஜ்ரிவால் சாடினார். டெல்லி ஆளுநருக்கு உள்ள அதிகாரம் பற்றி உச்சநீதி மன்றம் தெளிவாக சுட்டிக்காட்டிய பிறகும் இது போன்ற பிரச்சனைகள் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.      

Related Stories: