உலககோப்பை ஹாக்கி இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

ரூர்கேலா: ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று, இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்ட நேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் இப்போட்டி, கோல் இன்றி டிரா ஆனது.

இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணி, வேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

இந்த போட்டி வரும் 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்கவுள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது.இன்றைய தினம், 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு மலேசியா-சிலி அணிகளும், மதியம் 3 மணிக்கு நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகளும், மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்-தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா-ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன.

Related Stories: